உடுமலை, ஜூன் 16: உடுமலை வனச்சரகம் பகுதியில் உள்ள சின்னாறு, கோடந்தூர் மலைவாழ் மக்கள் பள்ளி குழந்தைகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் மக்கள் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.அறக்கட்டளை நிறுவனர் நவநீத ராஜா தலைமையில் மலைவாழ் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் விதத்தில் மதிய உணவு பை, ஸ்கூல் பேக், பிஸ்கட், பேனா, பென்சில் போன்ற பொருட்களை வழங்கினர். பள்ளி தலைமையாசிரியர் ரோஸ்லின் செல்வபாய் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கோடந்தூர் மலைவாழ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி
64
previous post