தேன்கனிக்கோட்டை, மே 30: அஞ்செட்டி தாலுகா சீங்கோட்டையை சேர்ந்தவர் கோபி (45), வேன் டிரைவர். இவர் வேனில், தாம்சனப்பள்ளி பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு, அஞ்செட்டியில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி, நேற்று முன்தினம் மாலை சென்று கொண்டிருந்தார். கொண்டை ஊசி வளைவு ஒன்றில் திரும்பிய போது, நிலைதடுமாறிய வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில் வேனில் சென்ற தாம்சனப்பள்ளி மற்றும் சீங்கோட்டை பகுதியை சேர்ந்த பச்சையம்மா (42), வள்ளி (30), போதா (32), பெருமா (35), மாதம்மா (50), மாதம்மாள் (55), சிவானந்தா (35), கோவிந்தம்மாள் (42), கனகா (40), ராஜேஷ்வரி (32), ஜெயலட்சுமி (46), சரோஜா (45), உள்ளிட்ட 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைகாக சேர்த்தனர். விபத்து குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.