திருத்துறைப்பூண்டி, மே 9: மலேசியாவில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சங்கம் சார்பில் சர்வதேச சிலம்ப போட்டி நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி முத்தூஸ் கராத்தே மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் செங்காந்தள் சிலம்பம் கலைக்கூடம் மற்றும் திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட உலக சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் 4 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நான்கு முதல் பரிசு மற்றும் 6 இரண்டாம் பரிசு,4 மூன்றாம் பரிசும் பெற்றனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மிதுன் தொடுமுறையில் முதல் பரிசும் தனித்திறமையில் 2-ம் பரிசும் இரட்டைக் கம்பில் 2-ம் பரிசும் குழு போட்டியில் 3-ம் பரிசு பெற்றார். 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தனித் திறமையில் இரட்டைக் கம்பில் முதல் பரிசும், தொடுமுறையில் இரண்டாம் பரிசும் குழு போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றார். 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் அஸ்வின் ஒற்றை கம்பில் இரண்டாம் பரிசும் இரட்டை கம்பல் இரண்டாம் வருஷம் குழுப்பொடியில் மூன்றாம் பரிசும் பெற்றார் 5 வயதுக்கு உட்பட்ட பிரிவில் விடுமுறையில் முதல் பரிசும் ஒற்றைக்கம்பில் இரண்டாம் பரிசும் குழு போட்டியில் மூன்றாம் பரிசும் பெற்றனர்.