குத்தாலம், ஜூன் 10: மறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுற்றச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மறையூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மீனா தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டார கல்வி அலுவலர் உமா கலந்து கொண்டு சுற்றுச்சூழல் குறித்து பள்ளி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.