புதுக்கோட்டை, செப்.4: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டைச் சார்ந்த மறுவேலைவாய்ப்பு பெறாத 10,000 முன்னாள் படைவீரர்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தில் பதிவு செய்து மறுவேலைவாய்ப்பு பெறாமல் உள்ள, திறன் பயிற்சி பெற விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள், இவ்வலுவலக தொலைபேசி எண் 04322-236593-ல் தொடர்பு கொண்டு, தேவைப்படும் பயிற்சி விவரத்தினை இவ்வலுவலகத்திற்கு உடன் தெரிவிக்குமாறும், மேலும் இதுதொடர்பாக விவரங்கள் தேவைப்படின் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அருணா, தெரிவித்துள்ளார்.