வேடசந்தூர்: அய்யலூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆடுகள் திருடு போயின. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய கோரி அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் அய்யலூரில் இருந்து எரியோடு செல்லும் சாலையில் வடுகபட்டி பிரிவு அருகே ஆடுகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வடமதுரை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்நிலையில் போலீசார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.