ஜெயங்கொண்டம், ஜூலை 4: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே நடுக்கொலப்படி கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (83) இவரது மகன் நமச்சிவாயம் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். நமச்சிவாயத்தின் மனைவி சசிகலா அவரது குழந்தைகள் மற்றும் மாமனார் பரமசிவம் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பரமசிவத்திற்கு சசிகலா காலை முதல் மாலை வரை உணவு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பரமசிவம் சசிகலாவிடம் உணவு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில், இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, ஆத்திரமடைந்த பரமசிவம் அருகில் இருந்த அரிவாளால் சசிகலாவின் தலையில் வெட்டி உள்ளார். சசிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.