பொள்ளாச்சி, ஆக.22: பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்கம்,போலீஸ் டிராபிக் வார்டன்கள் சார்பில், 185 வது உலக புகைப்பட தினத்தை யொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியிலிருந்து புறப்பட்ட இந்த பேரணிக்கு,முன்னாள் டிராபிக் வார்டன் தலைமை தாங்கினார்.வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க மாநில பொருளாளர் சரவணன், பொள்ளாச்சி தலைவர் மதன கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மகாலிங்கபுரம் ரவுண்டானாவிலிருந்து புறப்பட்ட ஹெல்மெட் பேரணியானது, கோவை ரோடு காந்தி சிலை, அரசு மருத்துவமனை வழியாக, உடுமலை ரோடு சின்னாம்பாளையத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தினை சென்றடைந்தது. இந்த பேரணியின்போது, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.