திருப்பூர், ஜூன் 29: தமிழக அரசின் உத்தரவு படி மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில், மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உதவிகளை மருத்துவர்கள் கூறினர். இந்த முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவி தொகை, கல்வி உதவித்தொகை, உபகரணங்கள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.