தஞ்சாவூர், ஜூன் 19: தஞ்சாவூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி வளாகத்தில், அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் அகிலன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்ராம், செயலாளர் பாலமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அரசாணை 354-ஐ மறுவரையறை செய்து 14 வருடங்களில் ஊதிய பட்டை 4-ஐ வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3 ஆயிரமாக வழங்க வேண்டும். அரசாணை 4 (டி) மூலம் 1000 காலி இடங்கள் காலாவதியானதை திரும்ப பெற்று மீண்டும் அந்தக் காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர்.