Thursday, September 12, 2024
Home » மருத்துவ உலகை ஆளும் புதிய தொழில்நுட்பங்கள்!

மருத்துவ உலகை ஆளும் புதிய தொழில்நுட்பங்கள்!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்UPDATEஒவ்வோர் ஆண்டும் கல்வி, அறிவியல், விளையாட்டு, மருத்துவம் என பல்வேறு துறைகளில் புதிய புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றன. அவற்றில் நமது உடல் ஆரோக்கியத்தோடு மிகவும் நெருங்கிய தொடர்புடைய மருத்துவ தொழில்நுட்பங்கள் நம்மை உற்சாகப்படுத்தும் விதத்தில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், எந்தவித குறைபாடும் இல்லாமல், உடல் நலனை உற்சாகமாகப் பேணிக்காத்திடும் விதத்தில், நடப்பாண்டில் ஹெல்த்தோடு தொடர்புடைய ஒன்பது வகையான தொழில்நுட்பங்கள் வெளிவந்துள்ளன.இத்தகைய தொழில்நுட்பங்கள் அனைத்து வகையான சாதனங்கள், மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்காக, மேற்கொள்ளப்படும் செயல்முறைகள் மற்றும் திட்டமிடல் ஆகியவை எந்தவிதமான தடைகளும் இல்லாமல் நடைபெறுவதற்கான வழிமுறைகள், குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை முறைகளை அதிகரிக்க செய்தல் போன்றவற்றை உள்ளடக்கியது.2019-ம் ஆண்டில் நம்பிக்கை தரக்கூடிய ஹெல்த் டெக்னாலஜிக்களாக கருதப்படுவனவற்றில் செயற்கை அறிவாற்றல்(Artificial Intelligence), பேரேடு(Blockchain), குரலை அடையாளம் காணுதல்(Voice Search), வாடிக்கையாளர்களுடன் பேசுவதற்காக, மனிதனைப்போன்று வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம்(Chatbot) மற்றும் மெய்நிகர் உண்மை(Virtual Reality) போன்றவை முக்கிய இடம் வகிக்கின்றன.‘ஹெல்த் கேர் நிர்வாகிகள் நீண்ட காலமாகவே, தனிப்பயனாக்குதலுக்கான உண்மையான சந்தைப்படுத்தலில், தொழில்நுட்பம் மற்றும் தீர்வு குறைபாடு காரணமாக அதிருப்தி கொண்டுள்ளனர். மேலும் உண்மை நிலவரப்படி ஹெல்த் கேர் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு இன்றுவரை நம்பர் ஒன் தொடர்பு சாதனமாக தொழில்நுட்பம் இருக்கிறது’ என அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனைச் சேர்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்கள், ‘தொழில்நுட்ப குறைபாடு, ஹெல்த்கேர் எக்ஸிகியூட்டிவ்ஸ் தங்களுடைய நிறுவனத்துக்குள்ளேயே டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாறுவதில் இருந்து அவர்களைக் காப்பாற்றுமா?’ என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர். இனி, அவை குறித்து பார்ப்போம்.

செயற்கை அறிவாற்றல்(Artificial Intelligence)ஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கில் தற்போதுள்ள சூழலில், செயற்கை அறிவாற்றல் அபரிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது என்று சொல்லலாம். தன்னைச் சுற்றியுள்ள வாய்ப்புக்களைத் தூண்டுகின்ற இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு இதுவே சிறந்த தருணம் ஆகும். ஏனென்றால், செயற்கை அறிவாற்றல் என்ற தொழில்நுட்பம் மூலமாக, குறிப்பிட்ட நேரத்துக்குள் நோயாளிகள் தவறாமல் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் வகையில், ஆட்டோமேட்டிக் ரிமைண்டராக(Automate reminders) செயலாற்றல். அபாயகரமான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை, முக்கியமாக மருத்துவ உதவி உடனடியாகத் தேவைப்படுகிற நபர்களைக் கண்டறிந்து டாக்டர், நர்ஸ் மற்றும் அட்டெண்டர் ஆகியோரை அந்நபருக்குத் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக மேற்கொள்ள ஆயத்தப்படுத்தல். மேலும் IBM என சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிற Index Of Body Mass பரிசோதனையோடு, போதைப்பொருள் பழக்கத்துக்கு ஏதேனும் அடிமையாகி உள்ளனரா? என்பதையும் சோதித்தல். ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட உடல் நிலை, சுற்றுச்சூழல் காரணிகள் ஆகியவற்றுக்குப் பொருந்துமாறு, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தல் இந்த மூன்று கடினமான வழிகளில், தடுக்கக்கூடிய மருத்துவம் தொடர்பான நிகழ்வுகளின் பாதிப்புக்களைக் குறைக்க முடியும். அது மட்டுமில்லாமல், வெவ்வேறு வகையான இம்மூன்று வழிகளால், வாழிடத்தை உருவாக்கி கொள்ளவும், செயற்கை அறிவாற்றலைச் சந்தைப்படுத்தவும் முடியும். ஹெல்த்கேர் தொழிலில் 2014-ம் ஆண்டில் 600 மில்லியன் டாலராக இருந்த இந்த தொழில்நுட்ப வளர்ச்சி 6.6 பில்லியன் என்ற நிலையை அடைந்து, 2021-ல் ஆண்டு வளர்ச்சியாக 40 சதவீதத்தை அடையும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

பிளாக் செயின்(Block Chain)

ஹெல்த் டெக்னாலஜியில் பிளாக்செயின் என்பதும் ஒன்றாகும். இந்த தொழில்நுட்பத்தில் ரெக்கார்டுகள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். இந்த ரெக்கார்டுகள் பரிமாற்றம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கும். அதேவேளையில், இவற்றைத் திருத்தவோ, மாற்றவோ முயற்சி செய்வது என்பது இயலாத செயல் ஆகும். இத்தகைய தன்மை கொண்ட பிளாக்செயின் ஒருவருக்கு, பிட்காயின்(எல்லா நாட்டுக்கும் பொதுவான, கண்களால் பார்க்க முடியாத இணையதளத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் பணம்) மற்றும் டிஜிட்டல் கரன்சியாக சரிவுப்பாதையில் இணைக்கப்பட்டு பயன்படுகிறது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வல்லுனர்களுடன் இணைந்து காணப்படுகிறது. அதே வேளையில், ஒருசில வல்லுனர்கள் டிஜிட்டல் ஹெல்த்கேர் மார்க்கெட்டிங் உட்பட, பெரிய அளவிலான துறைகளை நிர்வகிப்பதில் உள்ள வழிமுறைகளைப் பிட்காயின் தொழில்நுட்பம் மாற்றுவதாக சந்தேகம் கொள்கின்றனர்.இது ஒருபுறம் இருக்க, ஹெல்த் கேர் நிர்வாகிகள், கோள வடிவிலான டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை, பிளாக் செயின் தொழில்நுட்பம்,* டேட்டா கலெக்‌ஷனை மாற்றுதல்.* டிஜிட்டல் டிஸ்பிளே விளம்பரத்தை முடிவு செய்தல்.* உரிமை மற்றும் டிஜிட்டல் சொத்து உடைமைகளின் பாதுகாப்பு.ஆகிய மூன்று முதன்மையான காரணங்களால் பாதிப்பு அடைய செய்வதாக கூறுகின்றனர். இந்த தொழில்நுட்பத்தின் அடிபாகம் மிகவும் எளிமையானது; அது மட்டுமில்லாமல், இந்த டெக்னாலஜி மேலே சொல்லப்பட்ட மூன்று காரணிகள் துணையுடன் ஒட்டுமொத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சிஸ்டத்தையே, புதியதாக கட்டமைக்கும் ஆற்றல் கொண்டதாக திகழ்கிறது.குரல் தேடல் (Voice Search)கடந்த 2014-ம் ஆண்டில், அமேசனால், சந்தையை அதிர வைக்கும் வகையில், ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே, ஹெல்த் கேர் மார்க்கெட்டிங் டெக்னாலஜியில், குரல் என்பது மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ஹெல்த் கேர் தொழிலில் குரல் ஆற்றல் வாய்ந்த சாதனமாக கருதப்படுவது மிகவும் முக்கியமானதாகும். அத்தகைய சிறப்பு தன்மை வாய்ந்த குரலைத் தேடல் என்பது, உலக நாடுகளிடையே நம்ப முடியாத அளவிற்குப் பிரபலமாகி கொண்டு வருகிறது. அமெரிக்கர்களில், ஆறு பேரில் ஒருவர் ஸ்மார்ட் ஸ்பீக்கரைச் சொந்தமாக வைத்துள்ளனர். அதுதவிர, நாற்பது சதவீத பெரியவர்கள் தினமும் ஒரு தடவையாவது குரல் தேடலை மேற்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இனி, சந்தைப்படுத்தலில், குரல் தேடல் எவ்வாறு பொருந்துகிறது என்பதைப் பார்ப்போம். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பெரும்பாலான அமெரிக்க நாட்டினர், தங்கள் வசிப்பிடம் அல்லது வேலை செய்யும் அலுவலகத்துக்கு அருகிலேயே, ஹெல்த் கேருக்கான வசதி, வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென நினைக்கின்றனர். ஏனென்றால், ஹெல்த் கேர் வியாபாரிகள் தங்களுடைய டிஜிட்டல் பிளாட்ஃபார்மை உள்ளூர்வாசிகளைக் கொண்டே மேம்படுத்த விரும்புகின்றனர். 2018-ம்ஆண்டில், கூகுள் தேடலில் 20% வரை குரல் தேடலை மேற்கொண்டுள்ளனர் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. இதுதவிர, உடல் நலத்துக்கான விஷயங்களில், ஐந்து பேரில் ஒருவர் குரலைப் பயன்படுத்துவோராக உள்ளனர். இறுதியாக, ஹெல்த்கேர் எக்ஸ்கியூட்டிவ்களுக்கு, நடப்பான்டிலும், அதன் பின்னரும், குரல் அற்புதமான வாய்ப்புக்களைத் தரும்.சாட்பாட்ஸ் (Chatbots)நமது உடல் நலத்துக்கான விஷயங்களில், சாட் பாட்ஸ் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடிய பல வகையான நன்மைகளைத் தரக்கூடியதாக உள்ளது. ஹெல்த்கேர் ஆர்கனைசேஷனை முன்னேற்றம் அடைய செய்வதில்,;; நோயாளியின் நிலைப்பாடு, மருந்து, மாத்திரைகள் கொடுப்பதை நிர்வகித்தல் போன்றவை ஆபத்தான சூழ்நிலை அல்லது முதலுதவி சிகிச்சை போன்றவை உதவி செய்கின்றன. ஹெல்த்கேரில் தனிப்பட்ட அனுபவம் கிடைக்கும்போது அது முக்கியமானதாகவும், தற்போதுள்ள நிலையில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.;பொதுமக்களும் இதை விரும்புவர். 2019-ம் ஆண்டில், சாட் பாட்ஸ் போன்ற தொழில்நுட்பங்கள் எண்ணிக்கை பெருகுவது நம்பதகுந்த வகையில் அதிகரிக்கும். மேலும், இது மிகவும் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகிறது. கஸ்டமருக்கான சேவை முதல் சிக்கல் இல்லாத நிலைக்குக்கூட சிறப்பான பரிசோதனைகளை தருதல் என சுவாரஸ்யம் நிறைந்த ஏராளமான விஷயங்கள் இந்த தொழில்நுட்பம் பற்றி சொல்லப்படுகின்றது. மெய்நிகர் உண்மை(Virtual Reality)2020-ம் ஆண்டில் ஹெல்த் டெக்னாலஜியில் மெய்க்குச் சமமான உண்மை 4 பில்லியன் டாலர் அளவுக்கு வியாபாரம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹெல்த்கேர் இது தொடர்பான நடவடிக்கைகளில் இன்றுவரை செயல்படாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. ஒருவேளை மெய்நிகர் உண்மையில் ஹெல்த்கேரின் செயலாற்றும் திறன் நோயாளிகளுக்கு, ஆரோக்கியம் தொடர்பான வசதிகள் பற்றி, உண்மையில் சுற்றுலா சென்று வந்ததற்கான உடனடி அனுபவத்தைக் கொடுக்கலாம் அல்லது வலிகளைச் சமாளிக்க நோயாளிகளுக்கு மெய்நிகர் உண்மை உதவும் வகையில் பயன்படுத்தப்படலாம். மேலும், இதில் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தொழிற்நுட்பங்கள், ஹெல்த் கேர் டெக்னாலஜியில் மெய்நிகர் உண்மை(Virtual reality) எந்த அளவிற்குப் புத்திகூர்மை நிறைந்ததாக உள்ளதோ, அந்த அளவிற்குத் தொடர்பினை உருவாக்குகின்றன. VR எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிற ஹெல்த் கேர் டெக்னாலஜி, ஆரோக்கியத்தைக் கவனத்தில் கொள்ளும் எந்தவொரு நிறுவனத்துக்கும் நம்பத்தகுந்த பயன்களைத் தருகிறது. அதிநவீனமான சமூக ஊடகங்கள்ஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கில், சமூக ஊடகங்கள் முதன்மையான சக்தியாக திகழ்கின்றன. இதில் ஒன்றும் ரகிசியம் எதுவும் கிடையாது. உங்களிடம் இருந்து நிறைய தரவுகள்(Data) கிடைக்கும்போது, கம்பெனிகள் குருட்டுத்தனமான தகவல்களிடம் இருந்து விலகி இருக்கின்றன. மேலும் சிறந்தவை கிடைக்கும் என நம்பிக்கை கொள்கின்றன. இதில், உங்களுடைய நிறுவனம் சரியான மெட்ரிக்ஸைப் பயன்படுத்துதல், பயனாளர் தொடர்புடைய தரவுகளை அலசி ஆராய்தல் முதலானவை பயன்படுத்தும்போது, உங்கள் கம்பெனி உபயோகப்படுத்துகிற ஒவ்வொரு நெட்வொர்க்கும் சரியான வியூகத்தில் சரி செய்யப்படுகின்றன.தனிப்பட்ட மொபைல் ஆப்ஸ்தனிப்பட்ட நோயாளிக்கான Personalized App உருவாக்குவது ஒருவருக்குப் பலவிதத்திலும் பலன் தரும். இது அனுகூலமான பல வாய்ப்புகளையும் கொண்டுள்ளது. பயனாளர் கண்ட்ரோல் பண்ணும் பொறுப்பில் இருப்பார். ஆனால், நீங்கள் விருப்பங்களுக்காக உங்களைப் புதுப்பித்து கொள்ள வேண்டும். இதன்மூலம், அளவுக்கு அதிகமான ஆற்றலைப் பெறுவீர்கள். மருத்துவரின் அப்பாயின்மென்ட் கேட்டல் என்பதில் தொடங்கி, பரிசோதித்தல், மொபைல்-ஆப் மூலமாக நோயாளியின் மெடிக்கல் ஹிஸ்டரியை அப்லோட் செய்தல் மற்றும் ரிசல்ட்டைப் பெறுதல் வரை ஹெல்த் ஆர்கனைசேஷன் பயனுள்ள டிஜிட்டல் சாதனத்தை இன்றைய நோயாளிகளுக்கு தயாரிக்க முடியும்.;; ;;;;;;;;;; ;பங்குதாரராக இருத்தல்மொபைல் ஆப்ஸ் நிறைய செலவினத்தை ஏற்படுத்தக்கூடியன என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கின்றன. அதனால், ஒரு சில ஹெல்த் ஆர்கனைசேஷன் மொபைலில் முதலீடு செய்வதில் ஆர்வம் கொள்வது கிடையாது. நடப்பாண்டில் ஹெல்த் கேர் மார்க்கெட்டர்ஸ் வேறுவிதமான சுலப வழியை எதிர்பார்த்தனர். இவர்கள், பிரபலமான உரிமையாளர்களுடன் பார்ட்னர்ஷிப் வைத்துக்கொள்வதை, குறிப்பிடத்தகுந்த நிலவியலுடன் ஆலோசிக்க வேண்டும். ஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கின் மற்ற ஏரியாக்களில் வரைமுறை எதுவும் வைத்துக் கொள்ள வேண்டாம். ;; வீடியோ மார்க்கெட்டிங்இந்த ஆண்டில் ஹெல்த் டெக்னாலஜிஸ்ட் எல்லாவிதமான மொபைல் டிராஃபிக்கும் 8 சதவீதத்துக்கு வீடியோவாக இருக்கும் என கணித்துள்ளனர். இந்த மீடியாவை விலக்கும்பட்சத்தில், சிறந்த மார்க்கெட்டிங் டெக்னிக்கை இழக்க நேரிடும். மனித தன்மைக்கான ஹெல்த் பிராண்டில் வீடியோ சிறந்த ஒன்றாக திகழ்கிறது. ஏனென்றால், இந்த சாதனத்தைப் பிரபலப்படுத்துவதன் வாயிலாக நாம் எண்ணற்ற பயன்களைப் பெறலாம். சோஷியல் மீடியாவான வீடியோ பிளாட்ஃபார்மைகளில் டிக்-டாக் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, ஹெல்த் கேர் மார்க்கெட்டிங்கில், மிகப்பெரிய வித்தியாசம் தோன்றும். மனதை மகிழ்விக்கக் கூடியதான சூழல் ஏற்படுவதோடு, இத்தொழிலில் சரியான பாதையில் மிகப்பெரிய முன்னேற்றமும் உண்டாகலாம்!தொகுப்பு: விஜயகுமார்

You may also like

Leave a Comment

thirteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi