தேவகோட்டை, ஆக. 18:கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, தேவகோட்டை நகர சிவன் கோயிலில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் தேவகோட்டை கிளை சங்கத் தலைவர் அமுதா காசிநாதன் தலைமையில், செயலாளர் கனகா பூமிநாதன், பொருளாளர் கௌரி கணியன் ஆகியோர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர்கள் கையில் பதாகைகளை ஏந்தி திருப்பத்தூர் சாலை வழியாக சென்மேரிஸ் வரை சென்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.