சிங்கம்புணரி, ஜூலை 18: உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, சிங்கம்புணரியில் சேவுக அரிமா சங்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். விழா குழு தலைவர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பட்டய தலைவர் ராஜமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அரிமா ஆளுநர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். மண்டலத் தலைவர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் அண்ணாதுரை, சிறப்பு மருத்துவர் மீனாட்சிசுந்தரம், செயலாளர் செல்வசேகரன், பொருளாளர் முருகேசன், கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.