வத்திராயிருப்பு, பிப்.22: வத்திராயிருப்பு புறவழிச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த கோரி இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடலில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் வத்திராயிருப்பு புறவழிச் சாலை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி மேம்படுத்த வேண்டும், வத்திராயிருப்பு வருசநாடு தேனி மலைபாதை திட்டத்தை தொடங்கிட வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் கையெழுத்து இயக்கம் தாலுகா செயலாளர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் வக்கீல் பகத்சிங் தொடக்கி வைத்து பேசினார். வத்திராயிருப்பு பேரூராட்சி தலைவர் தவமணி பெரியசாமி முதல் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். கோரிக்கை இயக்கத்தை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி, மாவட்ட செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லிங்கம், தாலுகா செயலாளர் கோவிந்தன், துணை செயலாளர்கள் மகாலிங்கம், மணிகுமார், நிர்வாகிகள் அருண்குமார், சதீஷ் ஆகியோர் உரையாற்றினர்.