நன்றி குங்குமம் டாக்டர் நோயாளிகளின் உரிமைகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், மருத்துவமனைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். Second opinion கேட்கும் விவகாரம், பெண் நோயாளிகளைப் பரிசோதிக்கும் முறை போன்றவற்றில் நோயாளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது இந்த உத்தரவு.* நோயாளிகள் தங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி வேறொரு டாக்டரிடமோ, மருத்துவமனையிடமோ ஆலோசனைகள் நடத்த அனுமதிக்க வேண்டும். * சிகிச்சை பற்றிய முழு விவரங்கள் அடங்கிய ஆவணம், விசாரணை அறிக்கை, ஒவ்வொரு சேவை மற்றும் வசதிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டணங்கள் என அனைத்தையும் நோயாளிக்கு கட்டாயம் வழங்க வேண்டும். * மருத்துவ சிகிச்சை ஆவணங்களை எப்போது கேட்டாலும், கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் வழங்க வேண்டும். * பரிசோதனை செய்யும் முன்பாகவும், சிகிச்சை அளிக்கும் முன்பாகவும் அவரிடம் அதை பற்றி விளக்கி ஒப்புதல் பெற வேண்டும். * சிகிச்சை பற்றிய ரகசியத்தை காப்பாற்ற வேண்டியது அவசியம். எச்.ஐ.வி நோயாளிகள் உட்பட எல்லா வகையான நோயாளிகளுக்கும் பாகுபாடின்றி சிகிச்சை அளிக்க வேண்டும். * பெண் நோயாளியை ஆண் டாக்டர் பரிசோதிக்கும் சூழல் ஏற்பட்டால், பெண் நோயாளியுடன் ஒருவர் இருக்க வேண்டும் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. மேற்கண்ட பரிந்துரைகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது. பொதுமக்களுக்கு சாதகமான அம்சங்கள் நிறைந்திருப்பதால் இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது. – ஜி.ஸ்ரீவித்யா
மருத்துவமனைகளுக்கு புதிய கட்டுப்பாடு
57
previous post