ராமநாதபுரம், செப்.12: பரமக்குடி சுகாதார மாவட்டத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட சுகாதார அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பது, பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம் மற்றும் அதனை சுற்றி இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.விண்ணப்பிக்க விரும்புவோர் https://ramanathapuram.nic.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சுகாதார அலுவலகம், விவேகானந்தர் தெரு, கேணிக்கரை 623 501. ராமநாதபுரம் அலுவலகத்தில் 24.9.2024 ம்தேதி மாலை 6 மணி வரை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.