அறந்தாங்கி, நவ.10: அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் மருதுபாண்டியர் 223-வது குருபூஜை விழாவை முன்னிட்டு 7-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கைபந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு தட்டுவண்டி, பிரிட்ஜ், எல்இடி டிவி, 3 லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடியில் மருதுபாண்டியர் 223-வது குருபூஜை விழாவை முன்னிட்டு ஏழாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. மாட்டு வண்டி எல்கைப் பந்தயத்தில் பெரியமாடு நடுமாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, தஞ்சை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட இரட்டைமாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்து கொண்ட இரட்டை மாட்டு வண்டிகள் நிர்ணயிக்கப்பட்ட பந்த இலக்கினை நோக்கி சீறிப்பாய்ந்தன. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு தட்டுவண்டி மற்றும் பிரிட்ஜ், டிவி மற்றும் ரொக்கத்தொகை கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. மணமேல்குடி கட்டுமாவடி சாலையில் நடைபெற்ற பந்தய நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். பாதுகாப்பு பணியில் மணமேல்குடி காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.