சேந்தமங்கலம்: சேந்தமங்கலம், புதுச்சத்திரம் வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு விலை உயர்ந்து வருகிறது. டன்னுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுச்சத்திரம், கொல்லிமலை வட்டாரத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளி, திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, கொளத்துப்பாளையம், எஸ்.உடுப்பம், பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, வெள்ளாளப்பட்டி, சிங்களாந்தபுரம், கொல்லிமலை அரியூர் நாடு, வளப்பூர் நாடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் கிழங்குகளை வியாபாரிகள் கொள்முதல் செய்து செல்லப்பம்பட்டி, ஆத்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.