வேளச்சேரி, மே 30: நெற்குன்றம், சக்தி நகரை சேர்ந்தவர் கிஷன் (18). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரது, நண்பர் அஷய் தமிழரசன் (16). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கிஷன் நேற்று காலை தனது பைக்கில் நண்பர் அஷய் தமிழரசனை ஏற்றிக்கொண்டு, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு சென்று கொண்டிருந்தார். பெசன்ட்நகர், 3வது குறுக்குத்தெரு வழியாக சென்றபோது, வேகத்தடையில் கட்டுப்பாட்டை இழந்த பைக் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த கிஷன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரது, நண்பர் அஷய் தமிழரசன் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்தார். இதைபார்த்த அப்பகுதி மக்கள், மயங்கி கிடந்த சிறுவனை உடனடியாக மீட்டு அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.