சிவகாசி, ஜூன் 16: சிவகாசி அருகே வேப்பமரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகாசி அருகே பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன்(25). இவர் துலுக்கன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். வாலிபர் சிவானந்தன் செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற அவர், வேப்பமரத்தில் மாடு கட்டும் கயிறு வைத்து தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சிவானந்தன் தந்தை குருவையா கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.