தர்மபுரி, ஜூன் 6: தர்மபுரி மாவட்டம் இண்டூர் நல்லானூர் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் முத்துக்குமார் (18). டிப்ளமோ படித்துள்ள இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 2பேருடன், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். டூவீலரை முத்துக்குமார் ஓட்டி சென்றார். பென்னாகரம்- தர்மபுரி ரோட்டில் குட்டிச்செட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் சாலையோர மரத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 3பேரையும், அப்பகுதியினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு முத்துக்குமார் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரத்தில் டூவீலர் மோதி வாலிபர் பலி
0
previous post