Wednesday, February 21, 2024
Home » மரக்காணம் அருகே பரபரப்பு மீனவர்கள் கோஷ்டி மோதல்

மரக்காணம் அருகே பரபரப்பு மீனவர்கள் கோஷ்டி மோதல்

by Karthik Yash

மரக்காணம், பிப். 10: மரக்காணம் அருகே நடந்த மீனவர்கள் கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இரு தரப்பை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் நேற்று முன்தினம் மத்திய மீன்வள ஆராய்ச்சி குழுவினர் மீனவர்களின் குறைகளை கேட்பதற்கான கள ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது கூட்டத்தில் கலந்துகொண்ட எக்கியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (48) ஆதரவாளர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (35) ஆதரவாளர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது மோதலாக மாறி இரண்டு கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் தடி, இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

இதில் இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்தவர்கள் தனித்தனியாக மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதில் சுரேஷ் தரப்பை சேர்ந்த விஜயன் கொடுத்த புகாரில் முருகன் (35), முருகேசன் (33), நாகராஜ் (35) ஆகிய மூன்று பேர் மீதும், முருகன் தரப்பை சேர்ந்த இளவரசி (37) கொடுத்த புகாரில் சுரேஷ் (48), வல்லரசு (25), இனியவன் (24), பாலாஜி (23), வல்லத்தான் (35) உட்பட இரண்டு கோஷ்டிகளை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ், வல்லரசு ஆகியோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen + 17 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi