Friday, July 19, 2024
Home » மரக்கன்று நடும் நிகழ்ச்சி

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

by Karthik Yash

காரிமங்கலம், ஜூலை 10: காரிமங்கலம் அருகே முக்குளம் ஊராட்சி ஏரிக்கரை பகுதியில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு, சுமார் 3000 மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தற்போது ஊருக்கு ஒரு குளம், வீட்டுக்கு ஒரு மரம் என்ற வாசகத்தை முன்னிலை படுத்தும் வகையிலும், ஏரிக்கரை மற்றும் குளம் ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் காஞ்சனா கண்ணபெருமாள் தலைமை வகித்தார். பிடிஓ.,க்கள் கணேசன், நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சப் கலெக்டர் கௌரவ்குமார் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்கள் தங்கள் வீடு மற்றும் குளங்கள், ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பேணிக்காக்கவும், இயற்கையை மேம்படுத்துவதில் அவசியம் குறித்து பேசினார். ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவதை பார்வையிட்டார். தொடர்ந்து தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் மகிழம், இலுப்பை, வேம்பு புங்கன், பாதாம் உள்பட பல்வேறு வகையான 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துணை தலைவர் மூர்த்தி, இன்ஜினியர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

18 − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi