நிலக்கோட்டை,ஜூன் 8: நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பள்ளபட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அடர் வனக்காடுகள் உருவாக்கும் வகையில் வைகை தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் ஊராட்சி மன்றத்தலைவர் நாகேந்திரன் தலைமையில் மரம் நடும் விழா நடைபெற்றது. இதில் நாவல்,பலா,புங்கள் வேம்பு உள்ளிட இருநூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. அப்போது தொண்டு நிறுவன இயக்குனர் அண்ணாத்துரை முன்னிலையில் எதிர்கால சந்ததியினருக்கு மரங்களின் அவசியம், அதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் நன்மைகள் குறித்த பதாகைகள் ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மரக்கன்றுகள் நடல்
56
previous post