சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வசிக்கும் பொறியாளர் ராஜேஷ். இவரை மயிலாடுதுறை மாவட்ட திமுக பொறியாளர் அணி தலைவராக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. புதிதாக பொறுப்பேற்ற பொறியாளர் ராஜேஷ் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே .பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றார்.புதிதாக பொறுப்பேற்றுள்ள ராஜேஷ்க்கு, திமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.