மயிலாடுதுறை, ஆக.12: மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ ராஜகுமார் வழங்கினார். மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் செல்வராஜ், துணைத்தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக எம்.எல்.ஏ. ராஜகுமார் கலந்துகொண்டு 220 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் சர்வோதயன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.
மயிலாடுதுறை பள்ளியில் 220 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
previous post