மயிலாடுதுறை, ஜூன் 28: ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் டென்சிங் நார்கே விருது பெற தகுதியானவர்க் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாட்டிற்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்திய அரசின் சார்பில் 2024ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விருதிற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விபரங்களை < https://awards.gov.in/ > என்ற இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை < https://awards.gov.in/ > என்ற இணையதள முகவரியிலேயே 30.06.2025க்குள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்யலாம். மேற்படி விருது பெறுவதற்கு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வீர தீர சாகச செயல்புரிந்தவர்கள் பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த், தெரிவித்துள்ளார்.