மயிலாடுதுறை, ஜூன் 18: வேலை தேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மற்றும் யூனியன் கிளப் மயிலாடுதுறை இணைந்து தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது. மயிலாடுதுறையிலுள்ள யூலியன் கிளப்பில் 20ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி 3 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்ய உள்ளனர். 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 5ம் வகுப்பு முதல் டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயதொழில் தொடங்க வங்கி கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொள்ளலாம். மேலும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுதர்கள் தங்களது சுய விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் இம்முகாமில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட கலெக்டர் காந்த் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
0