மயிலாடுதுறை, செப்.1: மயிலாடுதுறையில் காவல்துறையினருக்கு சிறப்பு லத்தி ட்ரில் கவாத் பயிற்சி நடைபெற்றது. இதில் லத்தியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டது மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் வாரம்தோறும் காவலர்களுக்கு பரேடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் சிறப்பு லத்தி ட்ரில் கவாத்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் காவல் துணை கண்காணிப்பாளர் திருப்பதி காவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி உட்கோட்டத்தில் உள்ள 250 க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் காவலர்களுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பொழுது லத்தியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எவ்வாறு தாக்குதல் நடத்த வேண்டும் உள்ளிட்ட பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. காவல் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.