பவானி, ஆக.19: பவானி ஊராட்சி ஒன்றியம், மயிலம்பாடி ஊராட்சி, காந்தி நகர் சமுதாய நலக்கூடத்தில் கிராம சபை கூட்டம் தலைவர் எஸ்.ஸ்ரீஜெயந்தி சிவானந்தன் தலைமையில் நடைபெற்றது. பவானி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) செந்தில்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி, ஊராட்சி துணை தலைவர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் டி.மாரிமுத்து வரவேற்றார்.
சுகாதாரம், குடிநீர், மின்விளக்கு, அடிப்படை தேவைகள் நிறைவேற்றுதல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், துளசிமணி, ருக்குமணி, கிராம நிர்வாக அலுவலர் குப்புசாமி, கிராம சுகாதார செவிலியர் செண்பகவல்லி, ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் கனிமொழி, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.