பணகுடி, மே 18: பணகுடி அருகே உள்ள மாதவன்குளம் பங்களா தெருவை சேர்ந்தவர் கலைச்செல்வன்(68). இவர், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். கடந்த 15ம் தேதியன்று அவரது கடைக்கு ஒருவர் ஆயில் வாங்குவதற்காக வந்துள்ளார். அவருக்கு பைக் இன்ஜின் ஆயில் எடுத்துக்கொண்டிருந்த கலைச்செல்வன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அந்த மர்மநபர் கலைச்செல்வன் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க செயின் மற்றும் அவரது பையில் வைத்திருந்த ரூ.600 ஆகியவற்றை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1.25 லட்சம் ஆகும். இதுதொடர்பாக கலைச்செல்வன் அளித்த புகாரின் பேரில் பணகுடி எஸ்ஐ ஸ்டீபன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மயங்கி விழுந்த கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு
71
previous post