திருவெறும்பூர், மார்ச் 20: திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் படி, திருச்சி மாநகர 59 மற்றும் 59 (அ) வட்டம் சார்பில் மன்னார்புரம் காஜா நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்ட செயலாளர்கள் கணேசமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் மண்ணை இளங்கோவன், கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மதிவாணன், இளம் பேச்சாளர் அலி மாஸ் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் நூர்கான், மாநகரத் துணைச் செயலாளர்கள் பொன்செல்லையா சரோஜினி. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட மாநகர வட்ட திமுக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பகுதி செயலாளர் மணிவேல் வரவேற்றார். 59வது வார்டு மாமன்ற உறுப்பினர் கீதா பாலமுருகன் நன்றி கூறினார்.