மன்னார்குடி, ஜூன் 4: மன்னார்குடி, நீடாமங்கலம் வட்டாரங்களில் இன்று நடைபெறவுள்ள, மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாமில் கலெக்டர், அமைச்சர்கள் கோவி. செழியன், டிஆர்பி ராஜா பங்கேற்கவுள்ளனர். திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்று அரசின் முக்கிய சேவைகளை அவர்களின் இல்லத்திற்கு அருகிலேயே வழங்கும் நோக்கத்தோடு மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடை பெறு வதை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் வாரியாக அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டத்தில் இன்று காலை முதல் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அதன்படி, நீடாமங்கலம் வட்டாரம் ஒளிமதி ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், அனுமந்தபுரம் ஊராட்சி மன்ற வளாகம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சி ஒரத்தூர் சக்தி திருமண மண்டபம கானூர் அன்னவாசல் ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், பொதக்குடி ஊராட்சி சேகரை தனியார் திருமண மண்டபம், அதங்குடி ஊராட்சி சேவை மைய கட்டிட வளாகத்தில் ஆகிய இடங் களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதுபோல் மன்னார்குடி வட்டாரத்தில் கர்ணாவூர் ஊராட்சி உள்ளூர் வட்டம் சேவை மையக் கட்டிடம், வடபாதி ஊராட்சி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் எதிர்புறம் கலைஞர் கலையரங்கம், சவளக்காரன் ஊராட்சி அரசு ஆதிதிரா விடர் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகியவற்றில் இன்று காலை மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
இம் முகாம்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர். மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் அதிக மாக அணுகும் 15 அரசு துறை வாயிலாக 44 வகையான சேவைகள் இத்திட் டத்தின் மூலம் வழங்கப்பட உள்ளன. எனவே, தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தினை பொதுமக்கள் சீரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு முகாமில் ஒருங்கிணைக்கப்படும் துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளை விரைந்து பெற்று பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.