மன்னார்குடி: கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், திருட்டு சம்பவங்களும் அதிகரித் துள்ளன. கோடை காலங்களில் புழுக்கத்தை தவிர்க்க பொதுமக்கள் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து துாங்குகின்றனர். மேலும், கோடை விடுமுறை யில், குடும்பத்துடன் வெளியூர்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும் போது அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் கொடுத்தால் பூட்டிக் கிடக்கும் வீடுகளை போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பு பணி களில் ஈடுபடுவார்கள். ஆனால், பெரும்பாலான பொதுமக்கள் காவல் நிலை யங்களில் தகவல் கொடுக்காமல் வீட்டை பூட்டி வீட்டு வெளியூர் சென்று விடுகின்றனர். இதனால், கோடை கால சீசன் திருடர்கள் அதிகரித்துள்ளனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் அடுத்த திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள சின்னம்மாள் நகரை சேர்ந்தவர் கணே சன் (53). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது உடல் நலம் சரியில்லாததால் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத் துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனு மதிக் கப் பட்டுள்ளார். இதனால் இவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அதுபோல் அதே பகுதியில் வசிக்கும் டைலர் பிரபாவதி (40) என்பவரும் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சின்னம்மாள் நகருக்கு வந்த மர்ம நபர்கள் கணேசன் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடி விட்டு வீட்டில் பொருத்த பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு அதே பகுதியில் உள்ள டைலர் பிரபாவதி வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து டிஎஸ்பி அஸ்வத் ஆன்டோ ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணா, டவுன் எஸ்ஐக்கள் முருகன், ஸ்ரீநிதி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சி களை போலீசார் ஆய்வு செய்த போது நான்கு மர்ம நபர்கள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து திருவாரூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நடந்த இந்த தொடர் திருட்டு காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.