தியாகராஜ நகர், ஆக. 24: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள எம்எஸ்சி கணினி அறிவியல் படிப்பில் சேர தகுதியான மாணவ- மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி கணினி அறிவியல் படிப்பில் சேர்ந்து பயில ஒரு சில காலியிடங்கள் மட்டுமே உள்ளன. இதில் சேர்ந்து பயில விரும்பும் தகுதியான மாணவ- மாணவிகளிடம் இருந்து புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமும், தகுதியும் நிறைந்த விண்ணப்பதாரர்கள் இதற்கான விண்ணப்ப கட்டணம், நுழைவு கட்டணம் ஆகியவற்றுடன் ஆக.27ம் தேதி மாலை 4.30 மணிக்குள் துறைத்தலைவரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.