பண்ருட்டி, ஆக. 23: பண்ருட்டியை அடுத்த பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி தமிழரசி(32). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவிக்கு இடையே அவ்வப்போது சிறுசிறு தகராறு ஏற்படும் என்றும், அதன் காரணமாக தமிழரசி கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டு இரண்டு நாட்களில் வீட்டிற்கு வந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் சம்பவத்தன்று கணவன், மனைவிக்கு தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக வெளியே சென்ற தமிழரசி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் இளையராஜா புகார் அளித்தார்.புகாரின்பேரில், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் பலராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.