விருத்தாசலம், ஏப். 4: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தேவங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகேசன்(34). இவரது மனைவி சத்யா(22). இருவருக்கும் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அழகேசன் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 30ம் தேதி அன்று அழகேசன் வேலைக்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் மனைவி இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்த போது தனது தாய் வீடான காட்டாண்டிக்குப்பத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் தனது மாமியாருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அங்கேயும் செல்லவில்லை என தெரிகிறது. மேலும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அழகேசன் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவபெருமாள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி மாயம் கணவன் புகார்
99
previous post