கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரியில், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு விழா கொண்டாடப்பட்டது. பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்து \\”மனைவியும்-மாண்பும்\\” என்ற பெயரில் பேசினார். ஓசூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் ராஜூ முன்னிலை வகித்தார். மூத்த பேராசிரியர் மகாலிங்கம் வரவேற்று பேசினார். பர்கூர் டிஎஸ்பி ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மனைவி நல வேட்பு நாள் விழாவுக்கு வந்திருந்த தம்பதிகளுக்கு காப்புக் கயிறு, ஆப்பிள், பூமாலை, ரோஜா பூ உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. முதலாவதாக தம்பதிகள் காப்பு கயிற்றை கட்டினர். பின்னர் மாலைகளை மாற்றிக் கொண்டனர். மேலும் இருவரும் கண்களை பார்த்துக் கொண்டு, மனம் விட்டு பேசினர். இந்நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் சண்முகம் செய்திருந்தார்.