காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் மனைவி நல வேட்பு தின விழா கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் தனியார் அறக்கட்டளை சார்பில் மனைவி நல வேட்பு தின விழா காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விழாவில், தம்பதிகள் சமேதரராக கலந்துக்கொண்டவர்கள் அருகருகே அமர வைத்து, கணவன் மனைவிக்கு மலர் கொடுத்தும், மனைவி கணவனுக்கு கனி கொடுத்தும் ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை அன்புடன் பரிமாறிக்கொண்டனர். மனைவிக்கு மரியாதை செய்யும் நிகழ்வாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.