காரைக்கால்,செப்.4: காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பத்தக்குடியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(67). கூலித் தொழிலாளியான இவரது இளைய மகன் ராஜீவ்காந்தி(40). இவருக்கு வனஜா என்ற மனைவியும், ராகுல் என்ற மகன், வர்ஷா, ராகினி என்ற மகள்கள் உள்ளனர். எல்லை மீறிய குடிப்பழக்கத்தால் ராஜீவ்காந்தி, வனஜா தமம்பதியரிடையே தகராறு எழுந்துள்ளது. கணவரின் குடிப்பழக்கத்தை திருத்தப் பார்த்த வனஜா, ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து பிள்ளைகளைக் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.
பின்னர் ராஜீவ்காந்தி அடிக்கடி மனைவி வனஜாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்துள்ளார். குடிப்பழக்கத்தை விட்டால்தான் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு குடும்பம் நடத்த வருவதாக வனஜா கராறாகக் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் மறுநாள் ராஜீவ்காந்தி உறவினர் பன்னீர்செல்வம் ராஜீவ்காந்தியைத் தேடியுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது கூரை மூங்கில் மரத்தில் சேலையில் ராஜீவ்காந்தி தூக்கில் தொங்கினார். இதுகுறித்து பன்னீர்செல்வம் திருநள்ளாறு காவல் நிலையத்தில் புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் அறிவுச்செல்வம் மற்றும் போலீசார், ராஜீவ்காந்தியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.