சேலம், ஆக.23: சேலம் கிச்சிப்பாளையம் காந்திமகான்தெருவை சேர்ந்தவர் பாலாஜி (38). இவரது மனைவி காயத்திரி. அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து பாலாஜி, மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால், அவர் கோபித்துக் கொண்டு தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம், அங்கு சென்று பாலாஜி தகராறு செய்துள்ளார். திடீரென கத்தியால் காயத்திரியை வெட்டினார். பலத்த காயமடைந்த அவர் கூச்சலிட்டார். இதனால், பாலாஜி ஓட்டம் பிடித்தார். காயமடைந்த காயத்திரியை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுபற்றி கிச்சிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து பாலாஜியை கைது செய்தனர்.
மனைவியை வெட்டிய கணவன் கைது
previous post