நெல்லை,மே14: தேவர்குளத்தில் மனைவியை அவதூறாக பேசி மிரட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தேவர்குளம் ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் சகுந்தலா (35). இவரது கணவர் ஞானசேகர்(40). இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கடந்த 10ம் தேதி வீட்டு முன் நின்று கொண்டிருந்த சகுந்தலாவிடம் ஞானசேகரன் தகராறு செய்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சகுந்தலா தேவர்குளம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ நாஞ்சில் பிரித்விராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஞானசேகரை கைது செய்தார்.
மனைவியை மிரட்டிய கணவன் கைது
82
previous post