செய்யாறு, மே 14: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா மானாம்பதி அடுத்த கண்டிகை பகுதியை சேர்ந்தவர் ஓமன். இவரது மகள் சினேகா(23). இவருக்கும் செய்யாறு அருகே உள்ள இருங்கல் கிராமத்ைத சேர்ந்த அஜீத் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றுமுன்தினம் சினேகா குடும்ப தகராறு தொடர்பாக செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்ய வந்தார். அப்போது, அங்கு வந்த அவரது கணவர் அஜீத், சகோதரிகள் அமுல், சிம்மராணி ஆகியோர், சினேகாவிடம் தகராறு செய்து, ஆபாசமாக பேசி சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சினேகா, செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்ஐ சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மனைவியை தாக்கி கொலை மிரட்டல் கணவர், உறவினர்கள் மீது வழக்கு போலீசில் புகார் அளிக்கச்சென்ற
0