நெல்லை, டிச. 4: பாளை அருகேயுள்ள சீவலப்பேரி சிவன் கோயில் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரி (38). இவருக்கும் இவரது கணவரான ராமசுப்புவுக்கும் (42) இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை பிரிந்து சண்முக சுந்தரி ஒரு மாதமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சண்முகசுந்தரி வீட்டில் இருக்கும்போது அங்கு வந்த ராமசுப்பு, அவரை அவதூறாக பேசி கையால் தாக்கி கீழே தள்ளி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சண்முகசுந்தரி சீவலப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் எஸ்ஐ சிவகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ராமசுப்புவை கைது செய்தனர்.
மனைவியை தாக்கிய கணவன் கைது
229