பாடாலூர், ஆக. 7: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஊத்தாங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (68). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவருடைய மனைவி பட்டுராஜா (62). இந்நிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் மது அருந்துவிட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் போதை தலைக்கேறிய நிலையில் தனது மனைவி பட்டுரோஜாவிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் ராஜேந்திரன் ஆத்திரமடைந்து மனைவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் பட்டு ரோஜாவை மீட்டு பெரம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். புகாரின்பேரில், பாடாலூர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர். இதையடுத்து பெரம்பலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.