திருப்பூர், ஜூன் 19: திருப்பூர், தாராபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்தார். அப்போது அதே நிறுவனத்தில் பணியாற்றிய சுப்புலட்சுமி என்பவருடன் பிரபாகரனுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த விவகாரம் சுப்புலட்சுமி கணவர் குணசேகருக்கு தெரியவரவே அவரை கண்டித்துள்ளார். இதனால் சுப்புலட்சுமி கோபமடைந்து தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் குணசேகரன் மற்றும் அவரது நண்பர்கள் விக்னேஸ்வரன், மணிமாறன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனின் வீட்டிற்கு சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த குணசேகரன், விக்னேஷ் மணிமாறன் ஆகியோர் சேர்ந்து பிரபாகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர். காயமடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்கு பதிந்து குணசேகரன் (39), விக்னேஷ் (எ) விக்னேஸ்வரன் (33) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கின் தலைமறைவான மணிமாறனை தேடி வருகின்றனர்.