அரியலூர், ஆக. 20: தனியார் வேலை வாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரத்தின சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, வரும் 23ம் தேதி, அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. சுமார் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடக்கிறது. இம்முகாமில் கலந்து கொள்ள 18 வயது முதல் 45 வரையும் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐடிஐ, டிப்ளமோ, வேளாண்மை படித்தவர்கள் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.