தாம்பரம்: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, மனநலம் பாதிக்கப்பட்டவர். சிறுமியின் பெற்றோர் கூலி தொழிலாளிகள். இவர்கள் தினமும் வேலைக்கு சென்றுவிடுவதால், தனது மகளை சிறுமியின் தாத்தா வீட்டில் விட்டுவிட்டு செல்வது வழக்கம். தாத்தா வீட்டுக்கு எதிரே சுகுமாரன் (62) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுமியின் குறைபாட்டை தெரிந்துகொண்ட சுகுமாரன், அடிக்கடி வந்து சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இதனிடையே, கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சிறுமிக்கு சுகுமாரன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த, விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து, குன்றத்தூர் காவல் நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். சிறுமி பாலியல் வழக்கு என்பதால் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முதியவர் சுகுமாரன், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் சுகுமாரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்….