விருதுநகர், ஆக.28: மநீம மாவட்ட செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. விருதுநகர் எஸ்பி அலுவலகத்தில் மநீம மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் நேற்று மனு அளித்தனர். மனுவில், ராஜபாளையம் மநீம செயலாளர் குருமூர்த்தி ஆக.21ல் அவரது டிரைவிங் ஸ்கூலில் இருந்த போது அதே ஊரை சேர்ந்த வெற்றிவேல் மற்றும் 4 பேர் சேர்ந்து குருமூர்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
குரூமூர்த்தி ராஜபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வசூலிக்க இடையூறாக இருந்ததை மனதில் வைத்து தாக்குதல் நடத்தி தலைமறைவாக உள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் தலைமறைவாக இருப்பதால் குருமூர்த்தி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் உள்ளது. குற்றவாளிகளை விரைவில் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.