திருப்பூர், ஜூன் 4: திருப்பூர் மாவட்டத்திலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பொியார், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அதன்பின், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு செல்வராஜ் எம்எல்ஏ தலைமை தாங்கி மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் பகுதி செயலாளர்கள் மேங்கோ பழனிச்சாமி, மு.க.உசேன், கோவிந்தராஜ், மியாமி அய்யப்பன், முருகசாமி, குமார் மற்றும் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர் பி.ஆர்.செந்தில்குமார், தெற்கு மாநகர பொருளாளர் செந்தூர் முத்து, தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், மண்டல தலைவர் கோவிந்தசாமி, தேவராஜ், வக்கீல் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை
0
previous post